/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி தீப்பற்றி எரிந்து சாவு
/
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி தீப்பற்றி எரிந்து சாவு
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி தீப்பற்றி எரிந்து சாவு
பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி தீப்பற்றி எரிந்து சாவு
ADDED : செப் 20, 2024 01:40 AM
பைக்கிலிருந்து விழுந்த
தொழிலாளி தீப்பற்றி எரிந்து சாவு
குளித்தலை, செப். 20-
குளித்தலை அருகே, பைக்கிலிருந்து விழுந்த தொழிலாளி தீப்பற்றி எரிந்து இறந்தார்.
குளித்தலை அடுத்த, வெள்ளமடைப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார், 48. இவர் மாணிக்கபுரத்தில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். கடந்த, 15 காலை 11:30 மணியளவில் தனது விவசாய நிலத்தில் டிராக்டரில் உழவு ஓட்டுவதற்காக பணிகளில் இறங்கினர். டீசல் இல்லாததால், அதை வாங்குவதற்காக தனக்கு சொந்தமான பஜாஜ் சிடி-100 பைக்கில் கேன் எடுத்துக் கொண்டு, 10 லிட்டர் டீசல் வாங்கி வந்து கொண்டிருந்தார். வரவனை மாணிக்கபுரம் நெடுஞ்சாலையில், சுக்காம்பட்டி பிரிவு சாலை அருகே, சிவக்குமார் பைக்கை நிறுத்திவிட்டு, சிறுநீர் கழித்து கொண்டிருந்தார்.
பின்னர், பைக்கை எடுத்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். அப்போது, கேனில் இருந்த டீசல் சிவக்குமார் மீது விழுந்தது. அப்போது சாலை ஓரத்தில், ஏற்கனவே எரிந்து கொண்டிருந்த தீ, அவர் மீது பட்டு தீக்காயங்களுடன் கீழே விழுந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு, கரூர் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து, பின் மேல் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு சிவக்குமார் உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மனைவி தங்கம், 43, கொடுத்த புகார்படி தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.