ADDED : அக் 14, 2024 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: ஓடிசா மாநிலம், பர்கன்முன்டா பகுதியை சேர்ந்தவர் காசாகிந்தி போய், 52; இவர், கரூர் அருகே வேடிச்சிப்பாளையம் பகுதியில், தங்கி செங்கல் சூளையில் வேலை செய்து வந்தார்.
நேற்று முன்-தினம் அதிகாலை, செங்கல் சூளை அருகே உள்ள கல் மண்ட-பத்தில் காசாகிந்தி போய் துாங்கி கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததில் ஆபத்தான நிலையில், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு, காசாகிந்தி போய் உயிரிழந்தார். வாங்கல் போலீசார் விசாரிக்கின்-றனர்.