ADDED : பிப் 02, 2026 06:30 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: கிருஷ்ணராயபுரம் பகுதிகளில், கத்திரிக்காய் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த மகிளிப்பட்டி, குழந்தைப்பட்டி, அந்தரப்பட்டி, நரசிங்கபுரம், மலையாண்டிப்பட்டி, வேப்பங்குடி, பஞ்சப்பட்டி பகுதிகளில் கத்திரிக்காய் சாகுபடி செய்துள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. தற்போது நடவு செய்யப்பட்ட செடிகள் வளர்ச்சி அடைந்து, காய்கள் பிடித்துள்ளன. விவசாய கூலி தொழிலாளர்கள் மூலம், காய்கள் பறிக்கப்பட்டு கிலோ, 40 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கரூர், திருச்சி, முசிறி மற்றும் உள்ளூர் வார சந்தைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.
