/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
எள் அறுவடை பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
/
எள் அறுவடை பணியில் தொழிலாளர்கள் மும்முரம்
ADDED : அக் 28, 2025 01:26 AM
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரத்தில், எள் அறுவடை பணிகளில் விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, சிவாயம், மலையாண்டிப்பட்டி, குழந்தைப்பட்டி, தேசிய மங்களம் ஆகிய பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களில் எள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
பருவ மழை காரணமாக எள் செடிகள் வளர்ச்சி கண்டுள்ளது. கடந்த வாரம் பெய்த மழையால் அறுவடை பணிகள் நிறுத்தப்பட்டது. தற்போது வெயில் அடிக்க துவங்கி உள்ளதால், விவசாய தொழிலாளர்களை கொண்டு எள் அறுவடை செய்து உலர்த்தப்பட்டுள்ளது. மேலும் மழை சீசன் துவங்கி விட்டதால், அறுவடை பணிகள் துரிதமாக நடந்து வருகிறது.

