/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்
/
களைகளை அகற்றும் பணி தொழிலாளர்கள் மும்முரம்
ADDED : பிப் 27, 2026 06:21 AM
கிருஷ்ணராயபுரம்; கிருஷ்ணராயபுரம் பகுதியில், மரவள்ளிக்
கிழங்கு செடிகளில் வளர்ந்த களைகளை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்-டனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மகி-ளிப்பட்டி, உடையந்தோட்டம், குழந்தைப்பட்டி, சிவாயம், கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி, திரு-மேனியூர், வயலுார், சரவணபுரம் ஆகிய பகுதி-களில் விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி செய்துள்ளனர்.
கடந்த மாதம் அறுவடை பணி நடந்தது. அதன் பிறகு இரண்டாம் கட்டமாக, மீண்டும் மரவள்ளி சாகுபடி செய்யும் வகையில் விவசாய நிலங்களில் உழவு பணி மேற்கொள்-ளப்பட்டது. பின்னர் சமன்படுத்தப்பட்ட நிலங்-களில், கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது குச்சிகள் வளர்ந்து செடிகளாக வளர்ந்-துள்ளது.செடிகளின் நடுவில் தற்போது களைகள் அதிக-மாக வளர்ந்து வருவதால், அவற்றை அகற்றும் பணியில் விவசாய கூலி தொழிலாளர்கள் ஈடு-பட்டுள்ளனர்.

