/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாலத்தில் மின் விளக்கு, கம்பங்களை பழுது நீக்கும் பணியில் தொழிலாளர்கள்

ADDED : மே 30, 2025 01:13 AM
குளித்தலை, காவிரி பாலத்தில் எரியாத மின் விளக்குகளை மாற்றியும், பழுதான மின் கம்பங்களை சரி செய்யும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
குளித்தலையில் அமைந்துள்ள, தந்தை பெரியார் காவிரி பாலத்தில் உள்ள மின் விளக்குகள் எரியாமலும், சில மின் கம்பங்கள் சேதமடைந்தும் காணப்பட்டது. இரவு நேரங்களில் பாலத்தில் பயணம் செய்வோர், விளக்குகள் எரியாததால் அச்சத்துடன் சென்று வந்தனர். மின் கம்பங்களையும், விளக்குகளையும் பராமரிக்க வேண்டும் என, நகராட்சி மற்றும் மின் வாரியத்துக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதையேற்று மின் வாரியம் மற்றும் நகராட்சி ஊழியர்கள் இணைந்து, மின் கம்பங்களில் ஏற்பட்டுள்ள பழுதுகளை நீக்கியும், எரியாத தெரு விளக்குகளை சரி செய்யும் பணியிலும் ஈடுபட்டனர். கிரேன் உதவியுடன் மின்வாரிய பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டனர். இதனால் இந்த வழியாக சென்ற வாகன ஓட்டுனர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.