ADDED : ஏப் 12, 2026 05:13 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம் : கிருஷ்ணராயபுரம் பகுதியில், விவசாயிகள் மரவள்ளிக்கிழங்கு சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிவாயம், பாப்பகாப்பட்டி, மலையாண்டிப்பட்டி, பஞ்சப்பட்டி, மகிளிப்பட்டி, உடையந்தோட்டம் பகுதிகளில் விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடி செய்துள்ளனர். கடந்த மாதம் நிலங்களில், கிழங்கு குச்சிகள் நடவு செய்யப்பட்டன. தற்போது அவை வளர்ச்சி அடைந்து இலைகள் வளர்ந்துள்ளன. மேலும் குச்சிகள் நடுவில் அதிகமான களைகள் வளர்ந்துள்ளன.
இதனை தடுக்கும் வகையில், களைகளை அகற்றும் பணியில், விவசாய தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர். கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது. குறைந்த தண்ணீரே போதும் என்பதால், விவசாயிகள் மரவள்ளி கிழங்கு சாகுபடிக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றனர்.
