/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிவப்பு சோளம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்
/
சிவப்பு சோளம் அறுவடை பணியில் தொழிலாளர்கள்
ADDED : ஜூன் 22, 2025 01:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் பகுதியில், சிவப்பு சோளம் அறுவடை பணிகள் நடந்து வருகிறது.
கிருஷ்ணராயபுரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட வயலுார், சரவணபுரம், பழையஜெயங்கொண்டம், லட்சுமணம்பட்டி, வீரியபாளையம், குரும்பப்பட்டி, குழந்தைப்பட்டி, வரகூர், மேட்டுப்பட்டி, புதுப்பட்டி, வேங்காம்பட்டி ஆகிய பகுதிகளில் சிவப்பு சோளம் பயிரிடப்பட்டுள்ளது. பயிர்களுக்கு கிணற்று நீர் பாசன முறையில் தண்ணீர் பாய்ச்சப்படுகிறது.
சிவப்பு சோளம் பயிர்கள் நல்ல விளைச்சல் கண்டுள்ளதால், விவசாய தொழிலாளர்களை கொண்டு அறுவடை பணிகள் நடந்து வருகிறது. மேலும் இந்த பயிர்கள் விவசாயிகள் வளர்க்கும் கால்நடைகளுக்கு தீவனமாக பயன்படுகிறது.