ADDED : பிப் 20, 2026 05:28 AM
அ நிறம் | அளவு
கிருஷ்ணராயபுரம்: சிவாயம் பஞ்சாயத்துக்கு உட்பட்ட, கிராம சாலை பகுதிகளில் வளர்ந்த செடிகளை அகற்றும் பணி நடந்தது.
கிருஷ்ணராயபுரம் அடுத்த சிவாயம் பஞ்சாயத்-துக்கு உட்பட்ட கோடங்கிப்பட்டி, பாப்பகாப்பட்டி கிராம இணைப்பு தார்ச்சாலை உள்ளது. இதன் வழியாக வாகன ஓட்டிகள் இரும்பூதிப்பட்டி, பாப்பகாப்பட்டி, வயலுார் ஆகிய பகுதிகளுக்கு செல்கின்றனர். சாலையோர இடங்களில் அதிகமான செடிகள் வளர்ந்து, புதர்கள் மண்டி வளர்ந்ததால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர். இதையடுத்து, சாலை-யோர இடங்களில் வளர்ந்த செடிகளை அகற்றும் பணிகளில், 100 நாள் திட்ட தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
