/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை துண்டிப்பு
/
இயந்திரத்தில் சிக்கிய ஊழியரின் கை துண்டிப்பு
ADDED : ஆக 08, 2025 01:16 AM
குளித்தலை, மாவு இயந்திரத்தில், சிக்கிய ஊழியரின் கை துண்டிக்கப்பட்டதால், உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த கூடமலையை சேர்ந்தவர் ராம்குமார், 52. இவர் பாலவிடுதி ரங்கப்பா நாயக்கன் பட்டியில் உள்ள, பழனிவேல் என்பவரது மில்லில் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஜூன், 1 மதியம் 2:00 மணியளவில் மாவு அரைக்கும் மிஷினில் வேலை பார்த்த போது, அவரது வலது கை மிஷினில் சிக்கி காயம் ஏற்பட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் மைலம்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டது.
பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் இருந்தவர். பின்னர் கோவை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அறுவை சிகிச்சை செய்யப்பட்டு வலது கையை நீக்கி விட்டனர்.
வேலைப்பளு கொடுத்து, அதனால் கையை இழந்ததாக ராம்குமார் கொடுத்த புகாரின்படி பாலவிடுதி போலீசார் மாவு மில் உரிமையாளர் பழனிவேலு, 62, மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.