ADDED : மார் 11, 2026 08:53 AM
ஈரான் மீதான போரை நிறுத்த கோரி
கருப்பு பேட்ஜ் அணிந்த ஊழியர்கள்
கரூர், மார்ச் 11
ஈரான்
மீதான போரை நிறுத்தக்கோரி, கரூரில் அரசு ஊழியர் சங்கத்தினர், நேற்று
கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
ஈரான் மீதான
போரை அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் உடனடியாக நிறுத்த வேண்டும்
என்பதை வலியுறுத்தி, நேற்று மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு ஊழியர்
சங்கத்தினர், கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட முடிவு
செய்தனர். அதன்படி, கரூர் மாவட்டத்தில் அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர்
அன்பழகன் தலைமை
யில், கலெக்டர் அலுவலகம்,
ஆர்.டி.ஓ.,
அலுவலகம், தாலுகா அலுவலகம் உள்ளிட்ட, பல்-வேறு அலுவலகங்களில் அரசு
ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து கொண்டு பணியில் ஈடுபட்டனர்.
கரூர் தொகுதி வாக்காளர்களுக்கு
அ.தி.மு.க., சார்பில் பரிசு பொருள்
கரூர், மார்ச் 11
சட்டசபை தேர்தலை
யொட்டி,
அ.தி.மு.க., சார்பில் கரூர் தொகுதியில் உள்ள, வாக்கா-ளர்களுக்கு
நேற்று பரிசு பொருட்கள் வினியோகம் செய்யப்பட்-டது.
தமிழக
சட்டசபை தேர்தல் தேதி, இன்னும் ஒரு சில நாட்களில் அறிவிக்கப்பட
உள்ளது. இதனால், வாக்காளர்களுக்கு தி.மு.க., - அ.தி.மு.க., சார்பில்,
பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கரூர் சட்டபை தொகுதியில்,
முதல்வர் ஸ்டா லின் பிறந்தநாளை-யொட்டி, தி.மு.க., சார்பில் ஏற்கனவே
எவர்சில்வர் அண்டா வழங்கப்பட்டது. இந்
நிலையில் நேற்று, அ.தி.மு.க.,
சார்பில் கரூர் சட்டசபை தொகு-தியில் உள்ள வாக்காளர்களுக்கு, வீடு,
வீடாக எவர்சில்வர் தட்டு, சேலை மற்றும் பொட்டு பாக்கெட்
வழங்கப்பட்டது. மேலும் கடந்த 2011-21 வரை, 10 ஆண்டுகளில் அ.தி.மு.க.,
சார்பில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த துண்டு பிரசுரம்,
பொதுமக்களுககு
அ.தி.மு.க.,வினர் வழங்கினர்.
தென்னிலை நான்கு சாலையில்
சிக்னல் அமைக்க கோரிக்கை
அரவக்குறிச்சி, மார்ச் 11
கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தென்னிலை கடைவீதி, நான்கு சாலையில் தானியங்கி சிக்னல் அமைக்க வேண்டும்.
தென்னிலை
மற்றும் சுற்றுவட்டாரத்தில், 50க்கும் மேற்பட்ட
குக்கிராமங்களிலிருந்து கூலித் தொழிலாளர்கள், உள்ளூர், வெளியூர்
செல்லும் பயணிகள் என பல்வேறு தரப்பினர் பணி நிமித்தமாக தென்னிலை
நான்கு வழி சந்திப்பில் வந்து செல்கின்-றனர். மேலும் அரசு மற்றும்
தனியார் பஸ்கள் சந்திக்கும் இடமாக நான்கு சாலை அமைந்துள்ளது. இதனால்
எப்போதும் இச்சா-லையில் வாகன போக்குவரத்து அதிகம் காணப்படுகிறது.
போக்குவரத்தை
ஒழுங்குப்படுத்த, கடைவீதியில் தடுப்பு கம்பி அமைக்கப்பட்டது.
இருப்பினும் தானியங்கி போக்குவரத்து சிக்னல் அமைக்க வேண்டும். இதனால்
எதிர்புறமாக வரக்கூடிய வாகனங்கள் ஒழுங்குப்படுத்தி செல்ல
முடியும். எனவே தென்-னிலை கடைவீதியில் நான்கு வழி சந்திப்பில்
தானியங்கி சிக்னல் அமைக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அரசு மருத்துவமனையில்
அம்மா உணவகம் வருமா?
கரூர், மார்ச் 11
கரூர்
நகரின் மையப்பகுதியில், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை
செயல்பட்டு வந்தது. இந்நிலையில் கொளந்தா-னுாரில், 300 கோடி ரூபாய்
செலவில், புதிய மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு, கடந்த 2019ல்,
அப்போதைய முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார். இதையடுத்து, பழைய
மருத்துவம-னையில் சிகிச்சை பெற்று வந்த தாய்மார்கள், உள் நோயாளிகள்
பிரிவு, புறநோயாளிகள் பிரிவு புதிய மருத்துவமனை கட்டடத்-துக்கு
மாற்றப்பட்டது. சித்த மருத்துவ பிரிவை தவிர, பல்வேறு மருத்துவ
பிரிவுகளும், புதிய கட்டடத்துக்கு மாற்றப்பட்டது.
இதனால், நாள்தோறும் வெளிப்புற நோயாளி
கள், 500க்கும் மேற்பட்டவர்கள் வரை வருகின்றனர். 300க்கும் மேற்பட்ட உள் நோயாளி
களுக்கு,
மருத்துவமனை தரப்பில் உணவு வழங்கப்படுகிறது. ஆனால், வெளிப்புற
நோயாளிகள், உள் நோயாளிகளின் உறவி-னர்கள், பார்வையாளர்கள் புதிய
மருத்துவமனைக்கு செல்லும் போது, குறைந்த செலவில் உணவு பொருட்களை
வாங்க முடி-யாமல் தவிக்கின்றனர். மருத்துவ கல்லுாரி மருத்துவமனையை
சுற்றியுள்ள, ஓட்டல்களில் கூடுதல் விலைக்கு, உணவு பொருட்கள் விற்பனை
செய்யப்படுகிறது. எனவே, புதிய மருத்-துவக் கல்லுாரி மருத்துவமனை
வளாகத்தில்,
அம்மா உணவகம் அமைக்க வேண்டும்.
கரூர் அருகே தார்ச்சாலை சேதம்
வாகன ஓட்டிகள் கடும் அவதி
கரூர், மார்ச் 11
கரூர் அருகே சாலைகள், பல மாதங்களாக குண்டும், குழியுமாக உள்ளதால், வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
கரூர்--வெள்ளியணை
சாலை வழியாக திருச்சி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களுக்கு
வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால், அப்பகுதியில் வாகனங்கள் சரிவர
செல்லும் வகையில், ரவுண்டானா மற்றும் உயர்மட்ட பாலம்
கட்டப்பட்டுள்ளது. இந்-நிலையில், வெங்ககல்பட்டியில் உயர் மட்ட
பாலத்தை அடுத்-துள்ள, சாலைகள் பல மாதங்களாக குண்டும், குழியுமாக
உள்-ளது. இதனால், கரூரில் இருந்து திருச்சி, மதுரை, திண்டுக்கல்
பகுதிகளுக்கு செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமப்படுகின்-றனர்.
மேலும்,
அப்பகுதியில் போதிய விளக்குகள் இல்லாததால், இரவு நேரத்தில்
டூவீலர்களில் செல்பவர்கள், சாலையில் உள்ள குழிகளில் தவறி
விழுகின்றனர். எனவே, கரூர்-வெள்ளியணை சாலை வெங்ககல்பட்டியில்
உள்ள, குண்டும், குழியுமான சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலை துறை
அதிகாரிகள் நடவ-டிக்கை எடுக்க வேண்டும்.
சிவாயம் காட்டுவாரியை துார்வார வேண்டுகோள்
குளித்தலை, மார்ச் 11
குளித்தலை
அடுத்த கட்டளை மேட்டு வாய்க்கால், வலைய-பட்டி சட்ரஸில் இருந்து
பணிக்கம்பட்டி, மேட்டுமருதுார் வழியாக, கல்லு பாலத்தில் கொடிங்கால்
வடிகால் வாய்க்கா-லுடன் இணைகிறது. இந்த சிவாயம் காட்டுவாரி,
வலையப்பட்-டியில் இருந்து பணிக்கம்பட்டி ஒல்லிவிட்டான் கோவில் வரை,
சில விவசாயிகள் ஆக்கிரமிப்பு செய்து உள்ளனர். வாய்க்காலில் செடி,
கொடிகள் முழுவதும் வளர்ந்து தண்ணீர் வெளியேற முடி-யாமல் தேங்கியுள்ளது.
அவ்வப்
போது பெயரளவில் மட்டுமே
ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது.
வடிகால்
வாய்க்காலில் உள்ள, ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றி,
விவசாயிகள் பாதிக்காத வகையில், மழை காலங்களில் தண்ணீர் உடனே செல்லும்
வகையில், துரிதமாக துார்வார நடவ-டிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி
விவசாயிகள், குளித்-தலை நீர்வளத்துறை உதவி செயற்பொறியாளர் மற்றும்
கலெக்ட-ருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
===================
கரூர்:கரூர் அருகே, அமராவதி ஆற்றுப்பகுதியில், சோளம் சாகுபடிக்-காக உரமிடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
திருப்பூர்
மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணையில் இருந்து, ஆற்றில் சம்பா
சாகுபடிக்காக திறக்கப்பட்ட தண்ணீர், தற்போது
குறைக்கப்பட்டுள்ளது. சம்பா நெல் அறு-வடை நிறைவு பெற்றதால், குறுகிய
கால பயிரான சோளம், கால்நடைகளின் தீவனத்துக்காக, அமராவதி
ஆற்றுப்பகுதிகளில் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி
வருகின்றனர்.தற்-போது, நெல் அறுவடை செய்யப்பட்ட நிலங்களில், கோடை
மழையை நம்பி, கரூர் மாவட்டத்தில் அமராவதி ஆற்றுப் பகுதி-களான
அரவக்குறிச்சி, க.பரமத்தி, தான்தோன்றிமலை, கிருஷ்ண-ராயபுரம்
வட்டாரத்தில் சோளம் பயிரிட களை கொல்லி உர-மிடும் பணிகள்
தொடங்கியுள்ளது.தமிழகத்தில் கோடை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக,
சென்னை வானிலை மையம் தெரிவித்-துள்ள நிலையில், சோளப்
பயிர்கள் நன்கு வளர களை கொல்லி உரமிடுதல் அவசியம் என,
விவசாயிகள் தெரிவித்தனர்.
