sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 01, 2026 ,மாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கரூர்

/

முன்னாள் அமைச்சரை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

/

முன்னாள் அமைச்சரை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சரை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

முன்னாள் அமைச்சரை கண்டித்து தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்


ADDED : பிப் 12, 2026 06:47 AM

Google News

ADDED : பிப் 12, 2026 06:47 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கரூர்: கரூர் அருகே, அ.தி.மு.க., முன்னாள் அமைச்சரை கண்டித்து, மாட்டு வண்டி தொழிலாளர்கள் நேற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு எதிராக, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் செயல்படுவதாக கூறி, அவரை கண்டித்து நேற்று மாலை வன்னியர் மக்கள் கட்சி தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில், மாடுகள் மற்றும் வண்டிகளுடன், தொழிலாளாளர்கள் மில் கேட் பகுதியில், விஜய பாஸ்கர் வீட்டுக்கு செல்லும் சாலையை, முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் மணல் உள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வாங்கல் மல்லம்பாளையத்தில் லாரி டிரைவர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது, வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என, கோஷம் எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள், புகார் கொடுக்கும் பட்சத்தில், விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மண்மங்கலம் தாசில்தார் சத்தியமூர்த்தியிடம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி, மனு அளித்தனர். இதனால், கரூர் மில்கேட் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.






      Dinamalar
      Follow us