/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கரூரில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
/
கரூரில் உலக மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
ADDED : ஜூலை 16, 2025 02:07 AM
கரூர், கரூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடந்தது.
கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவ கண்காணிப்பாளர் ராஜா தொடங்கி வைத்தார்.
பெண்ணுக்கு திருமண வயது, 21, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதன் அவசியம், முதல் குழந்தைக்கும், இரண்டாவது குழந்தைக்கும் இடையே தேவையான இடைவெளி, ஒரு பெண் கருவுற்ற காலத்தில், வீட்டில் மேற்கொள்ள வேண்டிய சாதகமான சூழ்நிலையை உருவாக்குதல், தாய் சேய் நலத்தை பாதுகாத்தல் குறித்து விழிப்புணர்வு பதாதைகளை ஏந்தி மாணவியர் பேரணி சென்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் இருந்து, தான்தோன்றிமலை அரசு கலை கல்லுாரி வரை பேரணி சென்றது. முன்னதாக, உலக மக்கள் தொகை தினத்தை முன்னிட்டு உறுதிமொழியை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். பேரணியில், அரசு அலுவலர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.