/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
புகழூர் அரசு பள்ளியில் உலக மண் தின விழா
/
புகழூர் அரசு பள்ளியில் உலக மண் தின விழா
ADDED : டிச 06, 2025 03:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: உலக மண் தின விழாவையொட்டி, புகழூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், தலைமையாசிரியர் விஜயன் தலைமையில், விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது. முகாமில், தமிழ்நாடு வேளண்மை துறை சார்பில், நடமாடும் பஸ் மூலம் மண் பரிசோதனை விளக்கம் செய்து காட்டப்பட்டது.
மண் பரிசோதனை கருவிகள், மண் வள அட்டை ஆகியவற்றை மாணவர்கள் பார்த்து தெரிந்துகொண்டனர். முகாமில், வேளாண்மை உதவி இயக்குனர் காதர் மொகைதீன், வேளாண்மை அலுவலர் ராசி பிரியா மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

