/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சண்டியாக பூஜை
/
மாரியம்மன் கோவிலில் ஸ்ரீ சண்டியாக பூஜை
ADDED : மே 17, 2025 01:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் மாரியம்மன் கோவிலில், வைகாசி திருவிழாவையொட்டி, நேற்று ஸ்ரீ சண்டியாகம் நடந்தது.கரூரில், பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆண்டுதோறும், வைகாசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு கடந்த, 11ல் கம்பம் நடுதலுடன் விழா தொடங்கியது. அதை தொடர்ந்து, நாள்தோறும் கோவிலில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிேஷகம், திருவீதி உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.
நேற்று காலை, கோவில் வளாகத்தில் கலசஸ்தாபனம், பாராயணம் பூஜை, சண்டியாகம் ஆகியவை நடந்தன. தொடர்ந்து, மூலவர் அம்மனுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.