ADDED : ஜூலை 04, 2025 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணராயபுரம், கிருஷ்ணராயபுரம் அடுத்த லாலாப்பேட்டை கடைவீதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. திருவிழாவை முன்னிட்டு, நேற்று முன்தினம் காலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் திருத்தேரில் வைத்து திருவீதி உலா நடந்தது.
தொடர்ந்து நேற்று மதியம் சிறப்பு அபிேஷகம் மற்றும் மலர் மாலைகள் கொண்டு அம்மன் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இரவு அம்மனுக்கு தனலட்சுமி சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.