/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பச்சமலை முருகன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலம்
/
பச்சமலை முருகன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலம்
பச்சமலை முருகன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலம்
பச்சமலை முருகன் கோவிலில் மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலம்
ADDED : மார் 28, 2024 07:04 AM
கோபி: பங்குனி உத்திர தேர்த்திருவிழாவை முன்னிட்டு, கோபி பச்சமலை முருகன் கோவிலில், மஞ்சள் நீர் உற்சவம் கோலாகலமாக நடந்தது.
கோபி பச்சமலை முருகன் கோவிலில், பங்குனி உத்திர தேர்த்திருவிழா கடந்த, 19ல், கொடியேற்றத்துடன் துவங்கியது. முக்கிய நிகழ்வாக தேரோட்டம் கடந்த, 25ல் நடந்தது. இதையடுத்து மஞ்சள் நீர் உற்சவம் நேற்று காலை நடந்தது. அப்போது வள்ளி, தெய்வானையுடன், கல்யாண சுப்ரமணியர், தேர்வீதியில் உலா சென்றார். அந்த சமயத்தில் தேர்வீதி மக்கள், ஒருவருக்கு ஒருவர் புனித மஞ்சள் நீரை ஊற்றி, கல்யாண சுப்ரமணியரை வழிபட்டனர்.
மதியம் 12:00 மணிக்கு தெப்பத்திருவிழா, கொடியிறக்குதல் மற்றும் அபி ேஷகம், தீபாராதனையுடன் பங்குனி உத்திர தேர்த்திருவிழா நேற்றுடன் நிறைவு பெற்றதாக, அறநிலையத்துறையினர் தெரிவித்தனர்.