/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா
/
அன்னை வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் யோகா தின விழா
ADDED : ஜூன் 22, 2024 12:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர் : உலக யோகா தின விழா, வெங்கமேடு ஸ்ரீ அன்னை வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது.விழாவில், பள்ளி மாணவ, மாணவிகள், 25 க்கும் மேற்பட்டவர்கள், பல்வேறு ஆசனங்கள் மூலம் யோகா பயிற்சியை மேற்கொண்டனர்.
அதை தொடர்ந்து, யோகா பயிற்சி மேற்கொண்ட மாணவ, மாணவிகளுக்கு பள்ளி தலைவர் மணிவண்ணன், பாராட்டு சான்றுகளை வழங்கினார். பிறகு, பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தது. அப்போது, பள்ளி தாளாளர் கீதா மணிவண்ணன் மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.