/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பள்ளப்பட்டியில் பா.ஜ., சார்பில் யோகா தின விழா
/
பள்ளப்பட்டியில் பா.ஜ., சார்பில் யோகா தின விழா
ADDED : ஜூன் 22, 2024 12:49 AM
அரவக்குறிச்சி : பள்ளப்பட்டியில், பா.ஜ., சார்பில் யோகா தினம் கொண்டாடப்பட்டது.பத்தாம் ஆண்டு யோகா தினத்தை முன்னிட்டு, அரவக்குறிச்சி மேற்கு ஒன்றிய பா.ஜ., சார்பில் பள்ளப்பட்டி தனியார் மஹாலில் யோகா தினம் கடைப்பிடிக்கப்பட்டது.
மேற்கு ஒன்றிய தலைவர் ஜவஹர்லால் தலைமையில், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் முன்னிலையில் யோகா தினவிழா கொண்டாடப்பட்டது. ஹிந்து முன்னணி மாவட்ட செயலாளர் ராமகிருஷ்ணன், யோகா பயிற்சி அளித்தார். ஒன்றிய துணைத் தலைவர்கள் ரேணுகா, வேல்முருகன், ஊடக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயராமன், விவசாய அணி ஒன்றிய தலைவர் முனுசாமி, மகளிர் அணி ஒன்றிய தலைவர் மல்லிகா மற்றும் நிர்வாகிகள், பொது மக்கள் யோகா பயிற்சி செய்தனர்.