/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்'
/
தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்'
தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்'
தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்'
ADDED : மே 23, 2025 01:10 AM
கரூர், தொழில் முனைவோருக்கான சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம் என, கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், அகமதாபாத் நிறுவனத்தில் இணைந்து தொழில்முனைவோர் மற்றும் புத்தாக்கத்திற்கான சான்றிதழ் படிப்பினை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு சான்றிதழ் படிப்பு ஜூன் 2025 முதல் தொடங்கவுள்ளது. இதற்கு, https://www.editn.in/Web-One-Year-Registration என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்த படிப்பிற்கு ஆண்டுக்கு, 80 ஆயிரம் ரூபாய் -கட்டணமாக தமிழக அரசு நிர்ணயித்துள்ளது. 21 முதல் 40 வயதுக்குட்பட்ட பட்டதாரிகள் மற்றும் ஐ.டி.ஐ.,-யில் தொழிற்கல்வி பயிற்சி முடித்தவர்கள் சேரத்தகுதியுடையவர்கள். கட்டணத்திற்கான வங்கிக்கடன் வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மேலும் விவரங்களுக்கு 8668101638, 8668107552 என்ற மொபைல் எண்ணை தொடர்ப்பு கொள்ளவும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.