தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கரூர்/ ஜெருசலேம் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

ஜெருசலேம் புனித பயணம் மானியம் பெற விண்ணப்பிக்கலாம்


ADDED : அக் 10, 2026 06:33 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 06:33 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கரூர்:ஜெருசலேம் புனித பயணம் சென்று வந்தவர்கள், மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தை சேர்ந்த கிறிஸ்தவர்கள், ஜெருசலேம் புனித பயணம் சென்று வருபவர்களுக்கு ஒருவருக்கு, 37 ஆயிரம் ரூபாய், கன்னியாஸ்திரிகளுக்கு, 60 ஆயிரம் ரூபாய் நேரடியாக மானியம் வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், இந்தாண்டு ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டு திரும்பியவர்களிடம் இருந்து, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை, கலெக்டர் அலுவலகத்தில் உள்ள பிற்பட்டோர் நலத்துறை அலுவலகத்தில் இருந்து பெறலாம். அல்லது, www.bcmbcmw.tn.gov.inஎன்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆணையர், சிறுபான்மையினர் நலத்துறை, கலசமகால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை -600 005 என்ற முகவரிக்கு அடுத்தாண்டு ஜன., 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us