/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
/
கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம்
ADDED : டிச 06, 2024 07:27 AM
கரூர்: சமுதாய நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருதுக்கு டிச.,15க்குள் விண்ணப்பிக்கலாம்.
சமுதாய மற்றும் ஜாதி நல்லிணக்கத்திற்கு, கபீர் புரஸ்கார் விருது ஒவ்வொரு ஆண்டும் முதல்வரால், குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்தியர்களும், இந்த விருது பெறுவதற்கு தகுதியுடைவர்கள். ஒரு ஜாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்கள், பிற ஜாதி, இனம், வகுப்பை சேர்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடமைகளையோ, ஜாதி கலவரத்தின்போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றி இருக்க வேண்டும்.
இது வெளிப்படையாக தெரிந்தால், அவரது உடல் மற்றும் மன வலிமையை பாராட்டும் வகையில் விருது வழங்கப்படும். 2025 குடியரசு தினத்தன்று வழங்கப்படும், கபீர் புரஸ்கார் விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான விண்ணப்பங்கள் அல்லது பரிந்துரைகளை, https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டுமே டிச., 15க்குள் அனுப்பி வைக்க வேண்டும். உரிய காலத்திற்குள் அனுப்பாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். பதக்கம் பெற தகுதியுள்ளவர்கள், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்படுகின்றனர். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.