/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
/
கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபர் கைது
ADDED : ஜூன் 15, 2025 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூர் அருகே, கத்தியை காட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் அருகே, வெங்கமேடு அரசு காலனி பகுதியை சேர்ந்தவர் மதிவாணன், 42; இவர், நேற்று முன்தினம் மாலை, பாலாம்மாள்புரம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ராமன், 40, என்பவர் கத்தியை காட்டி மிரட்டி மதிவாணனிடம், 300 ரூபாயை பறித்து கொண்டு தப்பினார். இதுகுறித்து, மதிவாணன் அளித்த புகார்படி, ராமனை வெங்கமேடு போலீசார் கைது செய்தனர்.