/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சட்டவிரோதமாக வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபர் கைது
/
சட்டவிரோதமாக வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபர் கைது
சட்டவிரோதமாக வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபர் கைது
சட்டவிரோதமாக வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபர் கைது
ADDED : டிச 08, 2024 01:16 AM
சட்டவிரோதமாக வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபர் கைது
கரூர், டிச. 8-
தென்னிலை அருகே, கிணறு தோண்ட சட்ட விரோதமாக, வெடி பொருட்களை கொண்டு சென்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம், தென்னிலை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகநாத் உள்ளிட்ட போலீசார் கடந்த, 5ல் தென்னிலை அருகே கரியாம்புதுார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திருச்சி மாவட்டம் புள்ளம்பாடி பகுதியை சேர்ந்த சக்தி, 38; என்பவர், 29 தோட்டாக்கள், 12 தாயத்து வெடி, ஒரு பேட்டரி ஆகியவற்றை, மெய்ஞானமூர்த்தி என்பவரது தோட்டத்தில் கிணறு தோண்ட சட்ட விரோதமாக கொண்டு சென்றது தெரிய வந்தது. சக்தியை போலீசார் கைது செய்தனர்.
மேலும், வெடி பொருட்களை சப்ளை செய்ததாக, திருப்பூர் மாவட்டம், மூலனுார் பகுதியை சேர்ந்த சிதம்பரசாமி, 72; என்பவரை தென்னிலை போலீசார் தேடி வருகின்றனர்.