ADDED : ஜூலை 16, 2025 01:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர், கரூரில், கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்த வாலிபரை, போலீசார் கைது செய்தனர்.
கரூர் டவுன் போலீஸ் எஸ்.ஐ., நாகராஜன் உள்ளிட்ட போலீசார், நேற்று முன்தினம் சிட்டி பஜார் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, திருநெல்வேலி மாவட்டம், விக்கிரம சிங்கபுரம் பகுதியை சேர்ந்த, ஹரிஹர சுப்பிரமணியன் என்பவரது மகன் ஜெய் கணேஷ், 27; என்பவர், 1.100 கிராம் கஞ்சாவை விற்பனைக்கு வைத்திருந்ததாக, கரூர் டவுன் போலீசார் கைது செய்தனர்.