ADDED : ஏப் 28, 2025 07:34 AM
டி.என்.பாளையம்: சத்தியமங்கலத்தை சேர்ந்தவர் ராஜாமணி. டி.என்.பாளையத்தில், குமரன்கோவில், கொங்கர்பாளையம் சாலையருகே தார் பிளாண்ட் கம்பெனி வைத்துள்ளார். தற்போது நிறுவனம் செயல்பாட்டில் இல்லை. இந்நிலையில் வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த லாரி பேட்டரி, ஜென்செட் அறையில் இருந்த பேட்டரி, கடந்த மார்ச், ௨௭ம் தேதி திருட்டு போனது.
இதுகுறித்து பங்களாப்புதுார் போலீசில் புகார் தரப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், பவானிசாகர், அண்ணா நகரை சேர்ந்த, மணிகண்டன் மகன் சுந்தரபாண்டியன், 30; என்பவரை கைது செய்தனர். இது தொடர்பாக மேலும் இருவரை தேடி வந்தனர். இந்நிலையில் திருட்டில் ஈடுபட்ட புளியம்பட்டி, பனையம்பள்ளி, எஸ்.பி.கார்டன் பகுதி முருகன் மகன் கருப்புசாமி, 23, என்பவரை நேற்று கைது செய்தனர். கோபி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

