ADDED : ஏப் 17, 2025 01:58 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்:கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், பைக் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர். திருச்சி மாவட்டம், மணப்பாறை பகுதியை சேர்ந்தவர் மோகன், 29; இவர் கடந்த, 14 மாலை ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை, கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து, மோகன் சென்று பார்த்த போது, பைக்கை காணவில்லை. மர்ம நபர் திருடி சென்று விட்டார்.
இதுகுறித்து, மோகன் அளித்த புகாரின்படி, பைக்கை திருடியதாக, கரூர் சின்ன ஆண்டாங்கோவில் பகுதியை சேர்ந்த தினேஷ், 35; என்பவரை பசுபதிபாளையம் போலீசார் கைது செய்தனர்.