/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது
/
இரண்டு பைக் திருட்டுவாலிபர் அதிரடி கைது
ADDED : ஏப் 18, 2025 01:15 AM
கரூர்:கரூர், நீலிமேடு பகுதியை சேர்ந்தவர் ஹரிஹரன், 27. இவர் கடந்த, 10ல், கரூர் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கை நிறுத்தி விட்டு சென்றார். சிறிது நேரம் கழித்து ஹரிஹரன் சென்ற போது, பைக்கை காணவில்லை. இதுகுறித்து, போலீசில் புகார் செய்தார். இதையடுத்து, ஹரிஹரன் பைக்கை திருடியதாக, கரூர் கோதுாரை சேர்ந்த ஜீவா, 29, என்பவரை பசுபதிபாளையம் போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர்.
அதில், ராயனுார் பகுதியை சேர்ந்த கபிலன், 25 என்பவரும் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை வளாகத்தில், ஸ்பிளண்டர் பிளஸ் பைக் நிறுத்தி வைத்துள்ளார். இந்த பைக்கையும், கடந்த, 12ல் ஜீவா திருடி சென்று உள்ளது
தெரியவந்தது. இரண்டு திருட்டு வழக்கிலும், ஜீவா கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.