/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
/
சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது
ADDED : டிச 06, 2024 07:28 AM
குளித்தலை: திருச்சி மாவட்டம், மணப்பாறையை சேர்ந்த, 17 வயது சிறுமி தோகைமலை பகுதியில் உள்ள தன் சித்தி வீட்டிற்கு வந்திருந்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜா, 29, என்பவர் சிறுமியிடம் காதலிப்பதாக ஆசை வார்த்தை கூறியுள்ளார். கடந்த அக்.,7ல், சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது, ராஜா சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டார்.
தொடர்ந்து, பலமுறை பாலியலில் ஈடுபட்டுள்ளார். சிறுமி கடந்த நவ., 15ல் கர்ப்பமாக இருப்பதாக ராஜாவிடம் கூறியுள்ளார். இதையடுத்து உறுதி செய்ய சோதனை செய்துள்ளனர். அதில் சிறுமி கர்ப்பமாக இருப்பது உறுதியானது. அடுத்த ஆண்டு திருமணம் செய்து கொள்வதாக, சிறுமியிடம் கூறி, அவரிடம் பேசுவதை தவிர்த்து விட்டார்.
நடந்த சம்பவங்களை, சிறுமி தன் பெற்றோரிடம் தெரிவித்தார். பின், சிறுமியின் தந்தை கொடுத்த புகார்படி, குளித்தலை மகளிர் போலீசார் நேற்று முன்தினம் வழக்கு பதிவு செய்து, வடசேரி கிராமத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளி ராஜாவை போக்சோவில் கைது செய்தனர்.