/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பகுதி நேர வேலை என ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி
/
பகுதி நேர வேலை என ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை என ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி
பகுதி நேர வேலை என ஆசை காட்டி வாலிபரிடம் ரூ.13.41 லட்சம் மோசடி
ADDED : டிச 12, 2024 07:38 AM
ஈரோடு: பகுதி நேர வேலை கிடைக்கும் என ஆசை காட்டி, ஈரோடு வாலி-பரிடம், 13.41 லட்சம் ரூபாய் மோசடி நடந்துள்ளது.
ஈரோடு, கதிரம்பட்டி மணல்மேடு பகுதியை சேர்ந்த நந்தகுமார், 36, ஆன்லைனில் பகுதி நேர வேலையை தேடினார். சமூக வலை-தளத்தில் அறிமுகமான நபர், பொருட்களை விற்றால் கமிஷன் தரப்படும் என்று தெரிவித்தார்.
இதை நம்பிய நந்தகுமார், முதல் தவணையாக, 900 ரூபாய் அனுப்பினார். அதற்கு உரிய பொருள், கமிஷன் கிடைத்தது. பின்னர், அவரை படிப்படியாக ஆசை காட்டி தொகையை அதிக-ரிக்க செய்தனர். சமூக வலைதள நபரை
நம்பி, 13 லட்சத்து, 41 ஆயிரத்து 434 ரூபாய் வரை அனுப்பியுள்ளார். நந்தகுமாருக்கு இதுவரை கமிஷனாக, 15 ஆயிரத்து, 500 ரூபாய் மட்டுமே கிடைத்தது.சில நாட்களில், சமூக வலைதள பக்கத்தை தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த நந்தகுமார், ஈரோடு எஸ்.பி., ஜவகரிடம் புகார் தெரிவித்தார். இதன்படி, ஈரோடு சைபர் க்ரைம் போலீசார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.