ADDED : செப் 16, 2026 07:04 AM
அ நிறம் | அளவு
அரவக்குறிச்சி:சின்னதாராபுரம் அருகே காட்டார்மங்கலத்தை சேர்ந்தவர் சரவணன், 30. இவர் கடந்த, 10 ஆண்டுகளுக்கு முன்பு மகாலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சரவணன் மதுவுக்கு அடிமையாக இருந்ததால், ஆறு ஆண்டுகளுக்கு முன்பு, இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்கின்றனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் மது போதையில், சரவணன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அருகில் இருந்தவர்கள் மீட்டு, அரவக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், சரவணன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். சின்னதாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
