நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
எருமப்பட்டி: எருமப்பட்டி யூனியன், பழையபாளையம் ஏரியில் இருந்து சாலப்பளையம் செல்லும் சாலையில் உள்ள கருவாட்டாறு பாலத்தின் அருகே, 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்ம-மான முறையில் இறந்து கிடந்தார். நேற்று காலை அந்த வழியாக சென்றவர்கள், நாமக்கல் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் தெரி-வித்தனர்.
அங்கு சென்ற நாமக்கல் டி.எஸ்.பி., ஆனந்தராஜ், இன்ஸ்பெக்டர் கபிலன் ஆகியோர், கழுத்தில் காயங்களுடன் இறந்து கிடந்த வாலிபரின் உடலை மீட்டு, நாமக்கல் அரசு மருத்-துவமனைக்கு கொண்டு சென்றனர்.
உயிரிழந்த வாலிபர் தமிழகத்தை சேர்ந்தவர் என, போலீசார் உறுதி செய்தனர். மேலும், இவர் எந்த ஊர்? தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு இடத்தில் கொலை செய்து விட்டு இங்கு கொண்டு வந்து வீசி விட்டு சென்றார்களா என, போலீசார் விசாரித்து வருகின்றனர்.