/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
சரக்கு வாகனத்தின் பின்னால் மோதிய வாலிபர் உயிரிழப்பு
/
சரக்கு வாகனத்தின் பின்னால் மோதிய வாலிபர் உயிரிழப்பு
சரக்கு வாகனத்தின் பின்னால் மோதிய வாலிபர் உயிரிழப்பு
சரக்கு வாகனத்தின் பின்னால் மோதிய வாலிபர் உயிரிழப்பு
ADDED : ஜூலை 22, 2025 01:15 AM
அரவக்குறிச்சி, அரவக்குறிச்சி அருகே, முன்னால் சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தின் மீது, பின்னால் மோதி டூவீலரில் சென்றவர் உயிரிழந்தார்.
அரவக்குறிச்சி அருகே மலைக்கோவிலுார் பாரதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ், 53. இவர் மலைக்கோவிலுாரில் இருந்து, கரூர் செல்லும் சாலையில் குடகனாறு பாலம் அருகே நேற்று முன்தினம் இரவு, பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது தேனி மாவட்டம், பழனிசெட்டிபட்டியை சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் சரவணன், 35, என்பவர் ஓட்டி வந்த சரக்கு வாகனம் திடீரென எவ்வித சிக்னலும் இல்லாமல், பிரேக் போட்டதாக தெரிகிறது. இதனால் பின்னால் பைக்கில் வந்து கொண்டிருந்த மோகன்ராஜ், நிலை தடுமாறி சரக்கு வாகனத்தில் வேகமாக மோதினார். இதில் மோகன்ராஜ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மோகன்ராஜ் மனைவி சித்ரா கொடுத்த புகார்படி, அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.