/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்இருந்து விழுந்த இளைஞர் பலி
/
நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்இருந்து விழுந்த இளைஞர் பலி
நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்இருந்து விழுந்த இளைஞர் பலி
நாய் குறுக்கே வந்ததால் பைக்கில்இருந்து விழுந்த இளைஞர் பலி
ADDED : டிச 27, 2024 01:08 AM
குளித்தலை, டிச. 27-
நாய் குறுக்கே வந்ததால், பைக்கில் இருந்து தவறி விழுந்து இளைஞர் உயிரிழந்தார்.
குளித்தலை அடுத்த, வதியும் பஞ்., கண்டியூர் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் முத்துவேல், 49, விவசாய கூலித் தொழிலாளி. இவரது மகன் ராகுல் ரஞ்சன், 18, அதே ஊரைச் சேர்ந்த அருண்குமார், 26. இருவரும் பைக்கில் திருச்சி-கரூர் நெடுஞ்சாலையில் கடந்த, 22 இரவு 9:00 மணியளவில் குளித்தலை நோக்கி வந்து கொண்டிருந்தனர். வதியம் பஞ்சாயத்து அலுவலகம் அருகே, நாய் குறுக்கே வந்தது. இதனால், நிலை தடுமாறி கீழே விழுந்ததில், பைக்கில் பின்னால் அமர்ந்து வந்த ராகுல் ரஞ்சன் தலையில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு, குளித்தலை அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில் அவர், நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து, ராகுல் ரஞ்சன் தந்தை முத்துவேலு கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.