/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
/
பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பலி
ADDED : ஜூன் 28, 2025 04:21 AM
குளித்தலை: குளித்தலை அருகே, பைக்கில் இருந்து தவறி விழுந்த வாலிபர் இறந்தார்.
குளித்தலை அடுத்த, மருதுார் டவுன் பஞ்., குப்பரெட்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குமார், 52.
இவரது மகன் சிவசங்கர், 25, கடந்த 22ம் தேதி தனக்கு சொந்தமான பைக்கில், குளித்தலை சென்று விட்டு, தனது வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மேட்டு மருதுார் சாலையில் திருநாவுக்கரசு வாழைத்தோட்டம் அருகே வலிப்பு வந்ததால், நிலை தடுமாறி கீழே விழுந்தார்.இதில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து, குப்புரெட்டிபட்டியை சேர்ந்த தேவேந்திரன் என்பவர், பாதிக்கப்பட்ட சிவசங்கரை மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். பின், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.
இது குறித்து தந்தை குமார் கொடுத்த புகார்படி, குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.