துாய்மை பணியாளர் வீட்டில் திருடிய வாலிபருக்கு காப்பு
துாய்மை பணியாளர் வீட்டில் திருடிய வாலிபருக்கு காப்பு
ADDED : அக் 18, 2026 06:49 AM
அ நிறம் | அளவு
கரூர்:கரூர் அருகே துாய்மை பணியாளர் வீட்டில் திருடிய, வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
கரூர்
தெற்கு காந்தி கிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் பானுமதி, 52; புலியூர்
டவுன் பஞ்சாயத்தில், துாய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார்.
இவரது வீட்டில் வைக்கப்பட்டிருந்த, ஏழு பவுன் தங்க நகை கடந்த மே,
26ல், திருட்டு போனது.
இதுகுறித்து, பானுமதி அளித்த புகார்படி,
தான்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
அப்போது, துாய்மை பணியாளர் பானுமதியின் வீட்டில் திருடியது,
பசுபதிபாளையம் தெற்கு பகுதியை சேர்ந்த கார்த்தி, 37, என தெரிய
வந்தது. இதையடுத்து, அவரை தான்தோன்றிமலை போலீசார் நேற்று
முன்தினம் கைது செய்தனர்.
