ADDED : அக் 14, 2026 05:50 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை
அடுத்த ராஜேந்திரம் பஞ்., தண்ணீர்பள்ளி - பரளி நெடுஞ்சாலையில் உள்ள
ரயில்வே பாதையின் அருகே, நேற்று முன்தினம் இரவு திருச்சி - ஈரோடு பயணிகள்
ரயில் சென்று கொண்டிருந்தது.
அப்போது, அந்த வழியே சென்ற, 30 வயது
மதிக்கத்தக்க வாலிபர் மீது ரயில் மோதியது. இதில் அவர் சம்பவ
இடத்திலேயே உடல் நசுங்கி இறந்தார். இறந்தவர் யார் என தெரியவில்லை.
வி.ஏ.ஓ., குமரேசன் அளித்த புகாரின்படி, திருச்சி ரயில்வே போலீசார்
சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மாவட்ட
தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
