/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பாம்பு கடித்து வாலிபர், மூதாட்டி பலி
/
பாம்பு கடித்து வாலிபர், மூதாட்டி பலி
ADDED : அக் 21, 2024 07:36 AM
கரூர்: கரூர் மாவட்டம், கோடங்கிப்பட்டியை சேர்ந்தவர் பழனியம்மாள், 70; இவர் கடந்த, 8ல் தோட்டத்தில் மாடு மேய்த்து கொண்டிருந்தார். அப்போது, பாம்பு கடித்ததால், ஆபத்தான நிலையில் இருந்த பழனியம்மாள், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் பழனியம்மாள் உயிரிழந்தார். தான்தோன்றிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.
* குளித்தலை அடுத்த, வதியம் பஞ்., கீழவதியம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜ்குமார், 30; பிளம்பர். நேற்று முன்தினம் அதிகாலை, 3:30 மணிக்கு வீட்டில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது, கட்டுவிரியன் பாம்பு காலில் கடித்தது. உறவினர்கள் மீட்டு குளித்தல அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, கரூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். அவரது அண்ணன் ராஜசேகரன், 32, கொடுத்த புகார்படி, படி குளித்தலை போலீசார் விசாரிக்கின்றனர்.