/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தந்தை பெரியார் சதுக்கம்' பெயர் பலகை அகற்ற கோரிபா.ஜ., - ஹிந்து அமைப்புகள் போராட்டம்
/
'தந்தை பெரியார் சதுக்கம்' பெயர் பலகை அகற்ற கோரிபா.ஜ., - ஹிந்து அமைப்புகள் போராட்டம்
'தந்தை பெரியார் சதுக்கம்' பெயர் பலகை அகற்ற கோரிபா.ஜ., - ஹிந்து அமைப்புகள் போராட்டம்
'தந்தை பெரியார் சதுக்கம்' பெயர் பலகை அகற்ற கோரிபா.ஜ., - ஹிந்து அமைப்புகள் போராட்டம்
ADDED : ஜன 22, 2025 01:33 AM
ஓசூர்:ஓசூரில், 'தந்தை பெரியார் சதுக்கம்' என, மாநகராட்சி மூலம் வைத்த பெயர் பலகையை அகற்ற வலியுறுத்தி, பா.ஜ., - ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் இன்னர் ரிங்ரோட்டில், முனீஸ்வர் நகர், வ.உ.சி., நகர், நியூ ஏ.எஸ்.டி.சி., ஹட்கோ ஆகிய பகுதி
களுக்கு செல்லும் சாலைகள் சந்திக்கும் பகுதி, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என அழைக்கப்பட்டு வருகிறது. கடந்த, 2023 ஜூலை, 28 ல் நடந்த மாநகராட்சி கூட்டத்தில், அப்பகுதிக்கு, 'தந்தை பெரியார் சதுக்கம்' என தமிழிலும், 'தந்தை பெரியார் ஸ்கொயர்' என ஆங்கிலத்திலும் பெயர் சூட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. அதையும் மீறி கடந்த, 2023 ஆக., 22 ல் அரசாணை வெளி
யிடப்பட்டது.ஓசூர் மாநகராட்சி நிர்வாகம் நேற்று, 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' பகுதியில், 'தந்தை பெரியார் சதுக்கம்' என பெயர் பலகையை வைத்தது. இதற்கு, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து, அந்த பெயர் பலகையை அகற்றக்கூறி, பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ் தலைமையில், 100 க்கும் மேற்பட்டோர் அப்பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். பெண்கள், 'முனீஸ்வர் நகர் சர்க்கிள்' என்ற பேனரை பிடித்தவாறு நின்றிருந்தனர். ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் பேச்சுவார்த்தை நடத்தினார்.
மாநகராட்சி மேயர், கமிஷனர், நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளருக்கு, பெயர் பலகையை அகற்ற, பா.ஜ., மற்றும் ஹிந்து அமைப்புகள் சார்பில் கடிதம் கொடுப்பது எனவும், அகற்றா விட்டால் வரும் வெள்ளிக்கிழமை மக்களை திரட்டி, மறியல் போராட்டம் நடத்தப்படும் எனவும் கூறி, அனைவரும் கலைந்து சென்றனர்.