/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கி.கிரி நகர தி.மு.க., செயலாளருடன் வலுக்கும் மோதல்சுகாதார அலுவலர் மீது டெங்கு தடுப்பு ஊழியர்கள் புகார்
/
கி.கிரி நகர தி.மு.க., செயலாளருடன் வலுக்கும் மோதல்சுகாதார அலுவலர் மீது டெங்கு தடுப்பு ஊழியர்கள் புகார்
கி.கிரி நகர தி.மு.க., செயலாளருடன் வலுக்கும் மோதல்சுகாதார அலுவலர் மீது டெங்கு தடுப்பு ஊழியர்கள் புகார்
கி.கிரி நகர தி.மு.க., செயலாளருடன் வலுக்கும் மோதல்சுகாதார அலுவலர் மீது டெங்கு தடுப்பு ஊழியர்கள் புகார்
ADDED : ஜன 31, 2025 01:15 AM
கி.கிரி நகர தி.மு.க., செயலாளருடன் வலுக்கும் மோதல்சுகாதார அலுவலர் மீது டெங்கு தடுப்பு ஊழியர்கள் புகார்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், அத்துமீறி செயல்படுவதாக, நேற்று நகராட்சி முன், டெங்கு தடுப்பு பெண் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் நகர, தி.மு.க., செயலாளர் நவாப் மற்றும் சுகாதார அலுவலர் இடையே மோதல் வலுத்துள்ளது.
கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப்பின் கணவரான நவாப், நகர, தி.மு.க., செயலாளராக உள்ளார். இவர், நகராட்சி அலுவலகத்திற்கு தினமும் வந்து, நகராட்சி ஊழியர்களை தரக்குறைவாக பேசுவதாக, நகராட்சி, மாநகராட்சி அரசு அலுவலர் சங்கத்தினர் நேற்று முன்தினம் மாலை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், இளநிலை பொறியாளர் உலகநாதன் ஆகியோர், கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளர் மீது,
பல்வேறு குற்றச்சாட்டுகளையும் கடந்த, 25ல், தங்களை ஒருமையில் தரக்குறைவான வார்த்தையால் திட்டியதாகவும் கூறினர்.
நேற்று காலை, 11:00 மணியளவில், கிருஷ்ணகிரி நகராட்சியில் பணிபுரியும் தற்காலிக டெங்கு தடுப்பு பெண் பணியாளர்கள், அவர்களை சார்ந்தவர்கள், 350க்கும் மேற்பட்டோர், கிருஷ்ணகிரி நகராட்சி முன் திரண்டு, நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், தங்களிடம் ஆபாசமாகவும், தகாத வார்த்தையால் திட்டுவதாக கூறி,
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தொடர்ந்து, கிருஷ்ணகிரி நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகார் மனு அளித்த அவர்கள், கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன், டெங்கு தடுப்பு பணியாளர்களான எங்களை, பஸ் ஸ்டாண்டில், அரசு பஸ்களுக்கு நுழைவு கட்டணம் வசூலிப்பது, டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை பொறுக்க
செய்வது, மலம் அள்ளும் பணிகளில் ஈடுபட வைக்கிறார். பணி முடிந்து வீட்டிற்கு சென்றால் கூட, மொபைலில் அழைத்து ஆபாசமாக பேசுகிறார். இது குறித்து, கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர், நகராட்சி தலைவர் மற்றும் கலெக்டர் சரயுவிடம் மனு அளித்துள்ளோம்.
இவ்வாறு, அவர்கள் கூறினர். கிருஷ்ணகிரி நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ''டெங்கு தடுப்பு பணியாளர்கள், நகராட்சி தலைவர் பரிதா நவாப்பிடம் புகார் அளித்தனர். அப்போது நான் உடனிருந்தேன். என் பெயருக்கு, என் அறையில் வந்து, அவர்கள் புகாரளித்தால் நடவடிக்கை எடுக்க முடியும். நகராட்சி தலைவரிடம் அளித்த புகாரை பிடுங்கி, நான் நடவடிக்கை எடுக்க முடியுமா. அவர்களது அரசியல் விளையாட்டுக்கு, நான் பதில் கூற முடியாது,'' என்றார்.
சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் கூறியதாவது: டெங்கு தடுப்பில் பணிபுரியும் பெண் பணியாளர்கள் வெளிக்கொணர்வு ஒப்பந்த பணியாளர்கள். நகராட்சி நேரடி பணியாளர்கள் அல்ல. அவர்களுக்கு பணி கொடுக்க, நகர் நல அலுவலர் கணேஷ் உள்ளார். நான் எந்த பெண் ஊழியர்களிடமும் அத்துமீறி பேசியதில்லை. நான், தி.மு.க., நகர செயலாளர் நவாப் கூறுவதுபோல் நடக்கவில்லை என்ற காழ்ப்புணர்ச்சியில், அவர் தூண்டுதல் படி, இப்படி அவதுாறு பரப்புகின்றனர். இதனால், நகராட்சி பணிகள் பாதிக்கப்படுவதோடு, எங்கள் பணிகளை செய்ய முடியாத சூழல் உள்ளது. உயரதிகாரிகளிடம் இது குறித்து விளக்கம் அளித்துள்ளேன்.
இவ்வாறு, அவர் கூறினார்.கிருஷ்ணகிரி நகராட்சியில், தி.மு.க., நகர செயலாளர் நவாப், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணன் மோதலால், பணிக்கு வராமல், நேற்று பல ஊழியர்கள் விடுப்பு எடுத்தனர்.