/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
முனுசாமியை விமர்சித்து பேசிய வி.சி.க., மாவட்டசெயலர் மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு
/
முனுசாமியை விமர்சித்து பேசிய வி.சி.க., மாவட்டசெயலர் மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு
முனுசாமியை விமர்சித்து பேசிய வி.சி.க., மாவட்டசெயலர் மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு
முனுசாமியை விமர்சித்து பேசிய வி.சி.க., மாவட்டசெயலர் மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு
ADDED : மார் 02, 2025 01:23 AM
முனுசாமியை விமர்சித்து பேசிய வி.சி.க., மாவட்டசெயலர் மீது கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு
கிருஷ்ணகிரி:அ.தி.மு.க., துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ.,வை, அநாகரிகமாக விமர்சித்த கிருஷ்ணகிரி, வி.சி.க., மத்திய மாவட்ட செயலர் மாதேஷ் மீது நடவடிக்கை எடுக்க கோரி, அ.தி.மு.க.,வினர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர், எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தனர்.
கிருஷ்ணகிரி வி.சி.க., மத்திய மாவட்ட செயலராக இருப்பவர் மாதேஷ். இவர் நேற்று முன்தினம் சூளகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசுகையில், 'என்னை ஒருமையில் விமர்சித்து பேச கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., அசோக்குமாருக்கு என்ன தகுதி இருக்கிறது. அவரே அக்கட்சி துணை பொதுச்செயலரிடம் கைகட்டி நிற்கிறார். முனுசாமி எங்கெங்கு கல்குவாரி வைத்திருக்கிறார். எத்தனை கோடி சம்பாதித்து வைத்திருக்கிறார் என நான் சொல்லட்டுமா. அவர் ஜாதி ரீதியாக செயல்படும் இன்னொரு ராமதாஸ்' எனக்கூறி ஒருமையில் கடுமையாக விமர்சித்து பேசினார்.
இதனால், அ.தி.மு.க., தொண்டர்கள் கோபமடைந்தனர். நேற்று மதியம் காவேரிப்பட்டணம், அ.தி.மு.க., ஒன்றிய செயலர் பையூர் ரவி, கிருஷ்ணகிரி நகர செயலர் கேசவன் தலைமையில், 70க்கும் மேற்பட்டோர் எஸ்.பி., அலுவலகத்தில் மாதேஷ் மீது புகார் அளிக்க திரண்டனர். அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், நான்கு பேரை மட்டும் அனுமதித்தனர். கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., நகர துணை செயலர் சிவகுரு மற்றும் நிர்வாகிகள் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில் புகார்மனு அளித்தனர்.
அதில் கூறியிருப்பதாவது:கிருஷ்ணகிரி, வி.சி.க., மத்திய மாவட்ட செயலர் மாதேஷ், சூளகிரியில் நடந்த பொதுக்கூட்டத்தில், கிருஷ்ணகிரி, அ.தி.மு.க., எம்.எல்.ஏ., அசோக்குமாரை தரக்குறைவாக பேசியுள்ளார். மேலும் எங்கள் கட்சியின் துணை பொதுச்செயலர் முனுசாமி எம்.எல்.ஏ.,வை ஒருமையிலும், மிரட்டும் தொனியிலும், தனிமனித பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் மிரட்டி விமர்சித்துள்ளார்.
இதனால் கட்சி தொண்டர்கள், நிர்வாகிகள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர். இவர்கள் இருவரும், தற்போது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்கள். அவர்களை பற்றி பொது வெளியில் அநாகரிகமாக, ஜாதி கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய மாதேஷ் மீது, சட்டப்படியான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.தொடர்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் தினேஷ்குமாரிடமும்,
அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.