/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர் ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார் கயிறு கட்டி இழுத்து மீட்டனர்

ADDED : அக் 20, 2024 01:45 AM
ரயில்வே சுரங்கப்பாதை மழைநீரில் சிக்கிய கார்
கயிறு கட்டி இழுத்து மீட்டனர்
ஓசூர், அக். 20-
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் பகுதியில் நேற்று அதிகாலை கனமழை கொட்டியது. காலை முதல் மாலை வரை விட்டு, விட்டு மழை பெய்தது. இதனால், ரயில்வே சுரங்கப்
பாதையில் பல அடி உயரத்திற்கு மழைநீர் தேங்கியது. அப்போது, டெம்போ டிராவல்ஸ் வாகனத்தை பின்தொடர்ந்து சென்ற, ரேஞ்ச் ரோவர் சொகுசு கார், சுரங்கப்பாதையில் தேங்கி நின்ற மழை நீரில் சிக்கியது. காரின் உள்பகுதியில் தண்ணீர் நிரம்ப துவங்கிய நிலையில், காரில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்து வெளியேறி உயிர் தப்பினர். உடனடியாக ஒரு ஈச்சர் லாரியை வரவழைத்து கயிறு கட்டி மழை நீரில் சிக்கியிருந்த காரை வெளியே இழுத்தனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பின் கார் வெளியே வந்தது.
காரின் முன்னால் சென்ற சரக்கு வாகனமும் மழைநீரில் சிக்கியது. இதை பார்த்த மற்ற வாகன ஓட்டிகள், தேன்கனிக்கோட்டை சாலை வழியாக வாகனங்களை திருப்பி சென்றனர். பொதுவாக ஓசூர் ரயில்வே சுரங்கப்பாதையில் சிறிய அளவில் மழை பெய்தால் கூட நீர் தேங்கி விடும். ரயில்வே நிர்வாகம் தண்ணீரை மோட்டார் மூலமாக வெளியேற்றினாலும் நீண்ட நேரத்திற்கு அவ்வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்படும்.