/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
விவசாயத்தை அழிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஆவேசம்
/
விவசாயத்தை அழிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஆவேசம்
விவசாயத்தை அழிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஆவேசம்
விவசாயத்தை அழிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஆவேசம்
ADDED : பிப் 13, 2025 01:33 AM
விவசாயத்தை அழிப்பதை தமிழக அரசு நிறுத்த வேண்டும்விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஆவேசம்
ஓசூர்:''விவசாயத்தை அழிப்பதை, தமிழக அரசு நிறுத்த வேண்டும்,'' என, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி கூறினார்.
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகாவில் சிப்காட், 3 மற்றும் சிப்காட், 4 அமைக்க, விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு வருகின்றன. குறிப்பாக, நல்லகானகொத்தப்பள்ளியில் கெலவரப்பள்ளி அணை, பாசன கால்வாய் மூலம், பாசன வசதி பெறும் விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு எடுத்து வருகின்றனர். இதை கண்டித்தும், கெலவரப்பள்ளி அணை பாசன கால்வாய் திட்டத்திற்கு உட்பட்ட அனைத்து நிலங்களையும், பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்தியும், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில், சூளகிரி ரவுண்டானாவில் இருந்து, தாலுகா அலுவலகம் வரை, விவசாயிகள் நேற்று பேரணியாக சென்றனர். அங்கு, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள், தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் ஈசன் முருகசாமி தலைமையில், சிப்காட் தாசில்தார் பெருமாளிடம் கோரிக்கை மனுவை வழங்கினர்.
தொடர்ந்து, ஈசன் முருகசாமி நிருபர்களிடம் கூறியதாவது:நல்லகானகொத்தப்பள்ளி கிராமத்திலுள்ள விவசாய நிலங்களை சிப்காட்டிற்கு கையகப்படுத்தும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும். சிப்காட்டிற்கு நிலம் எடுக்க கையக படுத்துவதாக, 2015ல் அறிவிக்கப்பட்ட நிலங்களை வாங்க, விற்க முடியாத நிலை உள்ளது. விவசாயிகள் விருப்பம் தெரிவிக்காத அனைத்து நிலங்களையும், மாவட்ட கலெக்டர், நிலம் எடுப்பு தனி டி.ஆர்.ஓ., விடுவிக்க வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளை, தமிழக அரசு மதிக்காமல் சிப்காட்டுகளை கொண்டு வந்த வண்ணம்
உள்ளது. வேலை செய்வோர், முதலாளிகள் வெளியூர் நபர்களாக உள்ளனர். அப்படி இருக்க, விவசாய நிலங்களை ஏன் விவசாயிகளிடம் இருந்து எடுக்க வேண்டும்.
இப்பகுதியில் விளையும் காய்கறிகள், கீரைகள் தான், தமிழகம், கர்நாடகா மாநிலத்திற்கு செல்கிறது. இந்த விவசாய நிலத்தை அழித்து விட்டு, காய்கறி, கீரைக்கு எங்கே போக போகிறீர்கள். விவசாயத்தை அழிப்பதை, தமிழக அரசு நிறுத்த வேண்டும். இதற்கு மேல், சிப்காட் திட்டத்தை இங்கு கொண்டு வரக்கூடாது. ஏற்கனவே எடுத்த, 7 சிப்காட் திட்டங்களில், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.மாநில தலைவர் சண்முகசுந்தரம், பொதுச்செயலாளர் முத்துவிஸ்வநாதன், மேற்கு மாவட்ட செயலாளர் கணேஷ்ரெட்டி, கிழக்கு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி உட்பட பலர் பங்கேற்றனர்.