/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
'தி.மு.க., மாஜி நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்'
/
'தி.மு.க., மாஜி நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்'
'தி.மு.க., மாஜி நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்'
'தி.மு.க., மாஜி நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்'
ADDED : பிப் 14, 2025 01:11 AM
'தி.மு.க., மாஜி நிர்வாகி மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம்'
கிருஷ்ணகிரி, :'கிருஷ்ணகிரி, தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் நவாப் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்' என, நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் மற்றும் அரசு ஊழியர் சங்கத்தினர் கூறினர்.
கிருஷ்ணகிரி, தி.மு.க., நகர செயலாளராக இருந்த நவாப், நகராட்சி சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை தரக்குறைவாக பேசியதாக புகார் எழுந்தது. கடந்த, ஜன., 29ல் மாநகராட்சி நகராட்சி அலுவலர்கள் சங்கம் சார்பில் அவரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. டெங்கு பணியாளர்கள், நகராட்சி அலுவலகம் முன், சுகாதார அலுவலர் ராமகிருஷ்ணனை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இந்நிலையில், நகராட்சி கமிஷனர் அறையில் அமைத்த ரகசிய கேமராவில், பதிவான காட்சிகள் வைரலாகின. இது குறித்து, நகராட்சி கமிஷனர் கிருஷ்ணமூர்த்தி கடந்த, பிப்., 5ல் கிருஷ்ணகிரி டவுன் போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில், கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் நடந்ததாக, கிருஷ்ணகிரி நகர செயலாளர் பொறுப்பில் இருந்தும், தி.மு.க.,விலிருந்தும் நவாப் கடந்த, 8ல் தற்காலிகமாக நீக்கப்பட்டார்.
நேற்று, கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகம் முன், நகராட்சி, மாநகராட்சி அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிருஷ்ணகிரி கிளை தலைவர் அருண்குமார் தலைமை வகித்தார்.
கிருஷ்ணகிரி அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் சந்திரன் பேசுகையில், ''கிருஷ்ணகிரி, தி.மு.க., மாஜி நகர செயலாளர் நவாப், அரசு ஊழியர்களை ஒன்றிணைத்துள்ளார். நகராட்சியில் ரகசிய கேமரா வைத்தது யார் என்று போலீசார் கண்டுபிடித்திருப்பார்கள். அதை வெளிப்படுத்த வேண்டும். கட்சியிலிருந்து பதவி பறிக்கப்பட்ட பின்பும், நகராட்சி அலுவலகத்திற்கு நவாப் வருவதும், ஊழியர்களை மிரட்டுவதும் எவ்வாறு நியாயம். அவர் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கா விடில், அரசு ஊழியர் சங்கம், மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தும்,'' என்றார்.
அரசு ஊழியர் சங்க மாநில துணைத்தலைவர் தினேஷ் பேசியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின், தேர்தலுக்கு முன், அரசு ஊழியர்களுக்கு பல வாக்குறுதிகள் அளித்தார். அதை நம்பி, நாமும் அவரை முதல்வர் ஆக்கினோம். தற்போது, அவரது கட்சி நிர்வாகிகள், அரசு அலுவலகங்களுக்குள் புகுந்து மிரட்டுகின்றனர். பல்லை பிடுங்கிய பாம்பு சீறுவது போல, கட்சி பதவி பறிக்கப்பட்ட நவாப் மிரட்டுகிறார். 5,000 ஓட்டுக்கள் உள்ள கட்சிகளுடன், தி.மு.க., பேரம் பேசுகிறது. ஆனால் தொகுதிக்கு, 20,000 முதல், 30,000 அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளனர் என்பதை அரசு மறந்து விட்டது. முன்னாள், தி.மு.க., நகர செயலாளர் நவாப் மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் வரை போராட்டம் தொடரும்.
இவ்வாறு, அவர் பேசினார்.நகராட்சி மாநகராட்சி அலுவலர் சங்க மாநில பொது செயலாளர் தாமோதரன், கிருஷ்ணகிரி கிளைச் செயலாளர் ராமகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு சங்கங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.

