/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாமயில், சிம்ம வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா

ADDED : மார் 10, 2025 01:25 AM
ஓசூர் சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழாமயில், சிம்ம வாகனத்தில் உற்சவ மூர்த்தி உலா
ஓசூர்ஓசூர், மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம், 10ல், பால்கம்பம் நடும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தேர்ப்பேட்டையில் உள்ள மரகதாம்பிகை மற்றும் சந்திரசூடேஸ்வரர் தேர்களை கட்டி, அலங்கரிக்கும் பணியில் பக்தர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் கடந்த, 7ல், கோவிலில் அங்குரார்பணம் நிகழ்ச்சி மற்றும் நேற்று முன்தினம் காலை, 8:45 மணிக்கு கோவிலில் திருக்கொடியேற்றம் நடந்தது. அதன் பின், மலை மீதிருந்து உற்சவ மூர்த்தி தேர்ப்பேட்டை கல்யாண சூடேஸ்வரர் கோவிலுக்கு எழுந்தருளினார்.
அங்கு நேற்று முன்தினம் இரவு, 9;00 மணிக்கு சிம்ம வாகன உற்சவம், நேற்றிரவு மயில் வாகன உற்சவம் நடந்தது. கல்யாண சூடேஸ்வரர் கோவில் வளாகத்தில், மரகதாம்பிகை உடனுறை சந்திரசூடேஸ்வரர் உற்சவமூர்த்தி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மதியத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. வரும், 14 காலை, 10:00 மணிக்கு தேரோட்டம் நடக்கிறது.