/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கைதற்காலிக வாகன போக்குவரத்திற்கு நடவடிக்கை
/
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கைதற்காலிக வாகன போக்குவரத்திற்கு நடவடிக்கை
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கைதற்காலிக வாகன போக்குவரத்திற்கு நடவடிக்கை
ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க மக்கள் கோரிக்கைதற்காலிக வாகன போக்குவரத்திற்கு நடவடிக்கை
ADDED : ஜன 12, 2025 01:04 AM
ஓசூர்,:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ஜனகபுரி லே அவுட், பசுமை நகர், கயிலை நகர், நந்தவனம், கோபிகிருஷ்ணா லே அவுட் போன்ற பகுதிகள் உள்ளன. இங்கு பல ஆயிரம் குடும்பங்கள் வசிக்கின்றன. கடந்த, 20 ஆண்டுக்கு முன்பு வரை, ரயில்வே ஸ்டேஷன் அருகே இருந்த ரயில்வேகேட் வழியாக மக்கள் சென்று வந்தனர். ஆனால், ரயில்வே கேட்டை அகற்றி, அவ்
வழியாக செல்ல முடியாத அளவிற்கு, ரயில்வே நிர்வாகம் தடுப்பை ஏற்படுத்தி விட்டது. அதனால், 3 கி.மீ., துாரத்திற்கு மேல், கோகுல் நகர் வழியாக மக்கள் சுற்றி செல்ல வேண்டியுள்ளது. அவசர காலங்களில் ஆம்புலன்ஸ் போன்ற வாகனங்கள் வந்து செல்ல சிரமம் ஏற்படுகிறது. எனவே, சுரங்கப்பாதை அமைத்து தர வேண்டும் என, மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதையடுத்து, கிருஷ்ணகிரி காங்., - எம்.பி., கோபிநாத், நேற்று காலை ரயில்வே அதிகாரிகள் மற்றும் ஓசூர் மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் ஆகியோருடன், ஜனகபுரி லேஅவுட்டிற்கு சென்று, பொதுமக்களுடன் ஆலோசனை நடத்தினார்.
ரயில்வே ஸ்டேஷன் அருகே வாகனங்கள் செல்லும் வகையில், சுரங்கப்பாதை அமைக்க வேண்டும் என, பொதுமக்கள் கேட்டனர். பிப்., முதல் வாரத்திற்குள் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ரயில்வே அதிகாரிகளை எம்.பி., கோபிநாத் அறிவுறுத்தினார். அதுவரை மக்கள் தற்காலிகமாக சென்று வர வசதியாக, சரக்கு ரயில்களில் பொருட்களை இறக்க வரும் லாரிகள் பயன்
படுத்தும் ரயில்வே பாதையில், மக்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல, தேவையான ஏற்பாடுகள் செய்து கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அதேபோல், ஜனகபுரி லேஅவுட்டிற்கு வரும் தார்ச்சாலையை சீரமைத்து, தெருவிளக்குகள் அமைக்கப்படும் என, மாநகராட்சி கமிஷனர் ஸ்ரீகாந்த் தெரிவித்தார். இதனால், பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

