/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
போதை பொருட்கள் இல்லாத தமிழகம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
/
போதை பொருட்கள் இல்லாத தமிழகம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
போதை பொருட்கள் இல்லாத தமிழகம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
போதை பொருட்கள் இல்லாத தமிழகம் துண்டுபிரசுரங்கள் வழங்கி விழிப்புணர்வு
ADDED : பிப் 19, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி:போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு குறித்த 'மொபைல் ஆப்' குறித்து துண்டுபிரசுரங்களை மாணவர்களுக்கு வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என, ஆசிரியர்களுக்கு கலெக்டர் தினேஷ்குமார் அறிவுறுத்தினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில் போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற 'மொபைல் ஆப்' செயலி பதிவிறக்கம் செய்வது குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் பள்ளி கல்வித்துறை ஆசிரியர்களுடன் கலந்தாய்வு கூட்டம் நடந்தது.-
கலெக்டர் தினேஷ்குமார் தலைமை வகித்து பேசியதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் போதை பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் நடமாட்டம் குறித்து, தங்களுடைய சுயவிபரங்கள் இன்றி புகார் செய்யலாம். இதற்காக போதை பொருட்கள் இல்லாத தமிழ்நாடு என்ற 'மொபைல் ஆப்' அறிமுகம் படுத்தப்பட்டுள்ளது. நன்றாக படித்து வந்த மாணவர்களின் கல்வி திறனில் குறைபாடுகள், பழக்க வழக்கங்களில் மாற்றம் தெரிந்தால், ஒன்று போதை பொருட்களுக்கு அடிமையாக இருக்கலாம் அல்லது சொந்த பிரச்னையாக இருக்கலாம். அதை ஆசிரியர்களாகிய நீங்கள் நன்கு கவனித்து, அதிலிருந்து அவர்களை மாற்ற முயற்சி செய்யுங்கள். அல்லது, 'மொபைல் ஆப்'பில் புகார் செய்யுங்கள். மாவட்ட நிர்வாகம் போதை பொருட்களுக்கு அடிமையாக உள்ள மாணவர்களை மறுவாழ்வு மையத்திற்கு அனுப்பி, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்கும்.
இவ்வாறு, அவர் கூறினார். தொடர்ந்து விழிப்புணர்வு துண்டுபிரசுரங்களை கலெக்டர் வெளியிட, உயர்கல்வி துறை, தர்மபுரி மண்டல இணை இயக்குனர் சிந்தியா செல்வி, மாவட்ட சி.இ.ஓ., முனிராஜ் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.