/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அதியமான் மகளிர் கல்லுாரியில்உலக தாய்மொழி தின விழா
/
அதியமான் மகளிர் கல்லுாரியில்உலக தாய்மொழி தின விழா
ADDED : பிப் 23, 2025 01:26 AM
அதியமான் மகளிர் கல்லுாரியில்உலக தாய்மொழி தின விழா
ஊத்தங்கரை:ஊத்தங்கரை, அதியமான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் முதுகலை தமிழ்த்துறை மற்றும்
ஒளவையார் தமிழ் மன்றம் இணைந்து நடத்திய, உலக தாய்மொழி தினம் மற்றும் முத்தமிழ் விழா நேற்று நடந்தது.
தமிழ்த்துறையின் தலைவர் மற்றும் உதவி பேராசிரியருமான முனைவர் சவிதா வரவேற்றார். அனைவரும் தமிழ்மொழியின் பெருமையை கூறி உறுதிமொழி ஏற்றனர். கல்லுாரி நிறுவனர் மற்றும் முதல்வர் முனைவர் திருமால்முருகன் பேசுகையில், ''ஒரு இனத்தின் அடையாளமாக விளங்குவது மொழி. மொழி வளர்ச்சியை சார்ந்தே அந்த இனத்தின் கலை, கலாசாரம், சமூக பண்பாடு அம்சங்கள் வளர்ச்சி பெறுகின்றன. தாய்மொழியில் கல்வி கற்பதன் மூலம் ஆக்கப்பூர்வமான சிந்தனைகளை, சமுதாயத்தில் உருவாக்கலாம். உலகில் எண்ணற்ற மொழிகள் இருந்தாலும், தமிழ் மொழியே சிறந்தது,'' என்றார். அதியமான் கல்வி நிறுவனங்களின் செயலர் முனைவர் ஷோபா முன்னிலை வகித்தார்.தொடர்ந்து, இன்றைய மாணவ சமுதாயத்தை வளமாக்குவது கல்வியே, ஒழுக்கமே என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடந்தது. குடியாத்தம், திருவள்ளுவர் மேல்நிலைப்பள்ளி முதுகலைத் தமிழாசிரியர் முனைவர். தமிழ்திருமால் நடுவராக செயல்பட்டு, மாணவ சமுதாயத்தை வளமாக்குவது ஒழுக்கத்துடன் கூடிய கல்வியே என தீர்ப்பளித்தார். பல்வேறு போட்டி
களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.