/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அஞ்சலக சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்பெயரை பதிவு செய்ய நாளை கடைசி

ADDED : பிப் 27, 2025 02:01 AM
அஞ்சலக சிறப்பு விபத்து காப்பீடு திட்டம்பெயரை பதிவு செய்ய நாளை கடைசி
கிருஷ்ணகிரி:அஞ்சலக சிறப்பு விபத்து காப்பீடு திட்டத்தில், பெயரை பதிவு செய்ய நாளை (28ம் தேதி) கடைசி நாளாகும்.இது குறித்து, கிருஷ்ணகிரி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் ராகவேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய அஞ்சல் துறையும், இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியும் இணைந்து, பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கி வருகின்றன. அதன்படி, மிகவும் பயனுள்ள, பொதுமக்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ள
திட்டமான விபத்து காப்பீடு திட்டத்தை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு போய் சேர்க்கும் விதமாக, விபத்து காப்பீடு பதிவு வாரம் கடந்த, 24ல் துவங்கி நாளை (28ம் தேதி) வரை அமல்படுத்தி உள்ளது.
எதிர்பாராத விபத்துகளால் ஏற்படும் செலவுகள், பகுதி ஊனம், நிரந்தர ஊனம் மற்றும் உயிரிழப்பு அனைத்திற்கும் பயனளிக்கக் கூடிய, தனியார் விபத்து காப்பீடு திட்டத்தை, பொதுமக்களுக்கு இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி வழங்குகிறது. இத்திட்டத்தில், 18 வயது முதல், 65 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்களை இணைத்து
கொள்ளலாம்.இதில் இணைய, ஆதார் எண், மொபைல் எண், வாரிசுதாரரின் விபரங்கள் வழங்க வேண்டும். இத்திட்டத்தில், 320 ரூபாய் செலுத்தினால், 5 லட்சம் ரூபாய், 559 ரூபாய் செலுத்தினால், 10 லட்சம் ரூபாய், 799 ரூபாய் செலுத்தினால், 15 லட்சம் ரூபாய் காப்பீடு திட்டம் உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்ட மக்கள் இந்த வாய்ப்பை
பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.