/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்புபணம் பட்டுவாடா தாமதம் என குற்றச்சாட்டு
/
எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்புபணம் பட்டுவாடா தாமதம் என குற்றச்சாட்டு
எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்புபணம் பட்டுவாடா தாமதம் என குற்றச்சாட்டு
எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்புபணம் பட்டுவாடா தாமதம் என குற்றச்சாட்டு
ADDED : பிப் 28, 2025 01:29 AM
எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு நிலம் எடுப்புபணம் பட்டுவாடா தாமதம் என குற்றச்சாட்டு
கிருஷ்ணகிரி:எண்ணேகொள் கால்வாய் திட்டத்திற்கு எடுக்கப்பட்ட நிலங்களுக்கு பணப்பட்டுவாடா செய்வதை அதிகாரிகள் தாமதப்படுத்துவதாக, விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம், கலெக்டர் தினேஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில் விவசாயிகளின் கேள்விகளுக்கு, அதிகாரிகள் அளித்த பதில்கள் வருமாறு:
விவசாயி சரவணன்: பெஞ்சல் புயலில் பாதித்த அனைத்து மக்களுக்கும், இழப்பீடு தொகை வழங்கப்படவில்லை.
வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன்: பர்கூர், மத்துார் மற்றும் போச்சம்பள்ளி பகுதி விவசாயிகளுக்கு இழப்பீடு தொகை வழங்கப்பட்டு வருகிறது. விரைவில், ஊத்தங்கரை பகுதி விவசாயிகளுக்கும் இழப்பீடு தொகை வழங்கப்படும்.
விவசாயி ராமலிங்கம்: சிறு தானியங்களான கொள்ளு, பச்சைப்பயிறு, உளுந்து உள்ளிட்டவை அரசு நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும்.
கலெக்டர் தினேஷ்குமார்: நடவடிக்கை எடுக்கப்படும்.விவசாயி கணேஷ்ரெட்டி: தளி ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விட வேண்டும். கடந்தாண்டு விவசாயிகள் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது தளி ஏரியில், 75 சதவீதம் தண்ணீர் நிரம்பி உள்ளதால், பாசனத்திற்கு நீர் திறக்க வேண்டும். வண்ணம்மா ஏரி, கிருஷ்ணராஜா ஏரி, சூடசந்திரம் ஏரிகளில் இருந்தும் பாசனத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும்.
கலெக்டர் தினேஷ்குமார்: நீர்வளத்துறை, பாசன விவசாயிகள், பி.டி.ஓ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு முடிவு செய்யப்படும்.
தமிழக விவசாய சங்க மாநில தலைவர் ராமகவுண்டர்: எண்ணேகொள் கால்வாய் திட்டத்தில் கையகப்படுத்த நிலங்களுக்கு இழப்பீடு தொகை வழங்குவதில் அதிகாரிகள் தாமதப்படுத்துகின்றனர்.
டி.ஆர்.ஓ., சாதனைக்குறள்: எண்ணேகொள் கால்வாய் திட்டம் கடந்த, 2019ல், துவங்கி பணிகள் வேகமாக நடக்கிறது. சில இடங்களில் கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு இரு தரப்பினர் உரிமை கோருவதால், சிக்கல் ஏற்படுகிறது. அதை உங்களுக்குள் பேசி, நீங்கள் தான் முடித்து வைக்க வேண்டும். அப்போது தான் பணி முழுமையடையும்.
விவசாயி சங்கர்: மத்துார் அடுத்த நடுப்பட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு நிகழா வண்ணம் புறம்போக்கு நிலங்களில் மரக்கன்று நடவுகள் செய்து பராமரிக்க வேண்டும்.
கலெக்டர் தினேஷ்குமார்: மாவட்டம் முழுவதுமுள்ள அரசு நிலங்களில், 50 லட்சம் மரக்கன்று நட இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
விவசாயி பெரியண்ணன்: விவசாயிகள் தொடர்பான கூட்டங்களில் வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன் பாரபட்சம் காட்டுகிறார்.
வேளாண் இணை இயக்குனர் பச்சையப்பன்: அதுபோல் ஏதுமில்லை. இருப்பினும் அனைத்து தரப்பு கோரிக்கைகளும் கேட்கப்படும்.
இவ்வாறு, கூட்டத்தில் விவாதம் நடந்தது.கூட்டத்தில் இணை இயக்குனர் (தோட்டக்கலைத்துறை) இந்திரா, உதவி வன பாதுகாவலர் யஷ்வந்த் ஜெகதீஷ் அம்புல்கர், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் நடராஜன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் இளங்கோ, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.